Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனேகன் படத்துடன் களம் இறங்கும் சகாப்தம்!

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. ஜோடியாக நேஹா, சுப்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.

சுரேந்திரன் இதனை இயக்கியுள்ளார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை சிங்கப்பூர், மலேசியா, பேங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.மேலும் பிரம்மாண்ட பொருட்செலவில் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தின் ஆடியோ உரிமையை லகரி ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.’சகாப்தம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 31ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் பிரபல நடிகர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பாடல்களில் சிம்பு, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் பாடியது குறிப்பிடத்தக்கது. 

இதைத்தொடர்ந்து படத்தை காதலர் தினமான ஃபிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.இதே நாளில் தனுஷின் ’அனேகன்’ படமும் காதலர் தின சிறப்பாக பிப்ரவரி 13ம் வெளியாகவிருக்கிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close