Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100 கோடி அதிரடி வசூலில் ‘ஐ’!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக  வெளியாகி இருக்கும் படம் ‘ஐ’. ரூ.100 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது. 

ஆஸ்கர் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது .ஷங்கர் இயக்கியிருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். பொங்கல் விடுமுறை சிறப்பாகக் கொண்டு அதிகமான திரையரங்குகளில் வெளியிடப் பட்டது.

இப்படத்திற்கு தமிழகத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.



"தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 'ஐ' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கேரளாவில் தமிழ் படத்திற்கு கிடைத்த அதிக வசூல் என்ற சாதனையைப்  படைத்தது. உலகளவில் சுமார் ரூ.100 கோடி வசூலை 'ஐ' தாண்டிவிட்டது" என்று சினிமா வர்த்தக தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

ஆந்திராவிலும் 'ஐ' டப்பிங்கிற்கும் நல்ல வரவேற்போடு  படம் வெளியான முதல் நாளில் ரூ.9 கோடி அளவில் வசூல் செய்தது குறிப்படத்தக்கது. இந்திமொழி  'ஐ' டப்பிங் பதிப்பும்  ரூ.6 கோடி அளவில் வசூல் செய்திருக்கிறது. ஒரு பக்கம் எதிர்ப்புகள் , வலுக்கும் போராட்டங்கள் என வெடித்தாலும் மற்றொரு பக்கம் படம் தனது வசூலை குவித்து வருகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close