Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகமாகும் திரையரங்குகள் - மகிழ்ச்சியில் 'டார்லிங்' படக்குழு!

சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கில்ராணி, பால சரவணன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படம் 'டார்லிங்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் முதல் படம் 'டார்லிங்' என்பது குறிப்பிடத்தக்கது.

'ஐ', 'ஆம்பள' இரண்டு படங்களுக்கும் அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்ததால், குறைவான திரையரங்குகளில் வெளியானது 'டார்லிங்'.

தற்போது படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேல் டிவி விளம்பரங்களில் பேய் ‘ஐயம் கம்மிங் ஃபார் யூ’ எனக் கூற அதற்கு ராஜேந்திரன் ‘ஐயம் வெயிட்டிங்’ என ’துப்பாக்கி’ பட டயலாக் உட்பட காமெடி விளம்பரங்கள் என பட்டைய கிளப்பியது. இதனாலும் படத்திற்கு இன்னும் மவுசு ஏறியிருக்கிறது. 

இதற்கு சான்றாக ராஜேந்திரன் கோஸ்ட் ரைடர் கெட்டப்பில் இருக்கும் படி போஸ்டர்கள், மேலும் சில போஸ்டர்களில் ராஜேந்திரன் மட்டுமே இருக்கும்படி என போஸ்டர்கள் ஒட்டபட்டு வருகின்றன.

படம் வெளியான 2-ம் நாளில் 25 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close