Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஐ’ பட எதிர்ப்புகள்.. என்ன சொல்கிறார் படத்தில் நடித்த ஓஜாஸ்!

விக்ரம் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று திருநங்கைகள் கொதித்தெழுந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். சொந்த வாழ்க்கையிலும் மேக்கப் ஆர்டிஸ்டான இவர் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் போன்றோருக்கு மேக்கப், மற்றும் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இந்தியாவில் மிகவும் பிரபலமானவர். இவர் தன்னுடைய உண்மையான கேரக்டரான மேக்கப் பாத்திரத்திலேயே ‘ஐ’ படத்தில் நடித்துள்ளார்.

விக்ரமிற்கு மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்டாக ஓஸ்மா என்ற பெயரில் ஒரு கட்டத்தில் விக்ரமின் மீது காதல் கொள்ளும்படியும் அதை விக்ரம் உதாசினப்படுத்துவது போன்றும் காட்சிகள் நகரும். படத்தின் பின் பாதியில் முக்கிய வில்லன்களில் ஒருவராக மாறுவார் ஓஜாஸ். தற்போது கிளம்பியுள்ள போராட்டங்களுக்கும் , எதிர்ப்புகளுக்கும் ஓஜாஸ் தனது கடிதம் வாயிலாக பதில் அனுப்பியுள்ளார்.

அக்கடித்தத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, இந்த படத்தினை பார்த்து யாரும் கோவப்படவேண்டாம். இயக்குநர் ஷங்கர் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தினை அழகுடனும் நேர்த்தியுடனும் வடிவமைத்திருக்கிறார். என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற காதல் வயப்படுதல் அதனால் ஏற்படும் விளைவு மட்டுமே படத்தில் காட்டியிருக்கிறார். அது திருநங்கைகளை எந்த விதத்திலும் தவறாக காட்டப்படவில்லை. ‘ஐ’ சிறப்பாகவும், சிறந்த ஸ்டார் நட்சத்திரங்களைக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் வெளிநாட்டில் ஷீட்டிங்கில் இருக்கிறேன். படம் நல்ல முறையில் ஓடிகொண்டிருக்கிறது யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஓஜாஸ்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close