Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் சுமார் மூஞ்சி குமாரு?

’ரௌத்திரம்’, ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களை இயக்கிய கோகுல் தற்போது கார்த்தியை வைத்து ’கஸ்மோரா’ பட வேலைகளில் பிஸியாக உள்ளார். பிப்ரவரியில் இந்தப் படம் தொடங்குகிறது.மேலும் படத்திற்கு நாயகிகளாக நயன்தாரா, மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்க இருக்கின்றனர். 

இந்நிலையில், ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்தபோதே விஜய் சேதுபதியிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார் கோகுல்.கதை அவருக்குப் பிடித்துப் போக, நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

 ‘கஸ்மோரா’ முடிந்த பின் விஜய் சேதுபதி கோகுல் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது விஜய் சேதுபதி ‘நானும் ரவுடிதான்’, மற்றும் ஆரஞ்ச் மிட்டாய்’ படங்களில் பிசியாக இருக்கிறார்.இந்த படங்களில் ரிலீஸ்க்கு பிறகு கோகுல் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. 

ஒரு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி தனது ‘சுமார் மூஞ்சி குமாரு’ கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பால் முழுநீள படமாக இந்த கேரக்டரை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ‘சுமார் மூஞ்சி குமார்’ பாத்திரத்தை மையமாக வைத்துக் கூட இந்த புதிய படம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close