Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வஸந்த் இயக்கும் தண்ணீர்!

இயக்குநர் வஸந்த் தன்னுடைய புதிய படத்திற்கு ‘தண்ணீர்’ என பெயர் வைத்துள்ளார். ’மூன்று பேர் மூன்று காதல்’ படத்திற்கு பிறகு வஸந்த் இயக்கும் படம் இது. கிராஸ் வோர்ல்ட் நிறுவனமும், வஸந்தின் வஸந்த சித்திரமும் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளனர். 

கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். சாந்தினி சசஷா ஹீரோயினாக அறிமுகமாகும் இப்படத்தில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர் குல்ஷந்த் க்ரோவர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

எழுத்தாளர் அசோகமித்ரன் எழுதிய ’தண்ணீர்’ நாவலை அடிப்படையாக கொண்டு திரைவடிவமாக உருவாக உள்ளது. தண்ணீர் பிரச்னையை பிரதானமாக சொல்லும் இப்படத்தை இயக்குநர் பாரதிராஜா துவக்கி வைக்க இருக்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close