Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் ’என்னை அறிந்தால்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

’என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 5ம் தேதிக்கு மற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு ஜனவரி 29ம் தேதி என மாற்றப்பட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘என்னை அறிந்தால்’. ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் , பாடல்கள் என புத்தாண்டு தினத்தில் வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது படத்தின் சென்சார் பணிகள் தாமதமாவதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளது. படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள ஐங்கரன் நிறுவனம் படம் பிப்ரவரி 5ல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 

படத்திற்கு சில நெருங்கிய வட்டங்கள் படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர். ஒரு படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருமுறை மாற்றப்படும் அளவிற்கா இறுதி கட்ட பணிகள் தாமதம் ஏற்படும் என சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close