Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள பந்தத்தை பலப்படுத்துவேன் - சிம்பு!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா, ஆண்ட்ரியா சூரி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. படம் கோடைகால விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் டீஸர் கடந்த ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தில் வெளியானது. இதுவரை படத்தின் டீஸரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

டீஸரில் சூரியின் கவுண்டர் டயலாக்குகளும், காதல், பெண்கள் குறித்து சிம்பு பேசும் வசனங்களும் இளைஞர்களை சற்றே கவர்ந்திழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் தனக்களித்த ஆதரவால் மகிழ்ச்சியடைந்துள்ளார் சிம்பு. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 'என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி.

இடைவெளிக்கு பிறகும் எனக்கும்  என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்ப்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை  பலப்படுத்தி அவர்களுக்காகவே  மேலும்  நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்' என்று தன்னம்பிக்கை கண்ணில் மிளிர கூறினார் எஸ் டி ஆர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close