Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோடை விடுமுறையில் கமலின் உத்தமவில்லன்!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், ஊர்வசி, பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெய்ராம், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘உத்தம வில்லன்’. படத்திற்கு இசை ஜிப்ரான். படத்தை கடந்த செப்டம்பரிலேயே வெளியிடுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

கிராபிக்ஸ், சவுண்ட் எபெக்ட் உள்ளிட்ட பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பின் இடையில் ஓரிரு தேதிகள் அறிவிக்கப்பட்டு அதுவும் மாற்றப்பட்டது. பின் பிப்ரவரி மாதத்தில் வெளியிட முடிவு செய்தனர். இதே மாதத்தில் தற்போது தனுஷின் ‘அனேகன்’, ‘ஷமிதாப்’, மற்றும் இப்போது ’என்னை அறிந்தால்’ என வரிசையில் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. மேலும் ‘கொம்பன்’, ‘காக்கி சட்டை’ படங்களின் ரிலீஸ் தேதிகளும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளன. 

இதன் காரணமாக லிங்குசாமியிடம் கமல் படத்தின் ரிலீஸை தள்ளிபோடும்படி சொல்லிவிட்டாராம். காரணம் பிப்ரவரி மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு துவங்கவிருக்கிறது. எனவே, உத்தம வில்லன் படத்தை கோடை விடுமுறையில் ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close