Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்பாடா! நம்ம ஊருக்குள்ள வந்துட்டேன் - ’ஷமிதாப்’ சந்திப்பில் தனுஷ்!

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன், நடிப்பில் இளையராஜா இசையில் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் ‘ஷமிதாப்’. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. 

இதில் தனுஷ் , அக்‌ஷரா, பால்கி கலந்து கொண்டு ‘ஷமிதாப்’ படத்தின் சன்னடா பாடல் வீடியோவை வெளியிட்டனர். அப்போது உற்சாகத்துடன் பேசிய தனுஷ், ஊர் ஊரா என்னன்னே தெரியாம சுத்திட்டு இருந்தேன் . இங்க உள்ள எண்ட்ரி ஆனோன ஒரு சத்தம் காதை கிழிச்சுது. அப்பதான் அப்பாடா நம்ம ஊருக்குள்ள வந்துட்டேனு தோணுச்சு என்று கூறினார். 

‘ரஞ்சனா’ படத்திற்கு பிறகு ஏன் இந்தியில் இவ்வளவு பெரிய இடைவேளை என பலரும் கேட்டனர். பல கதைகள் வந்தன. எனினும் சிறந்த கதைக்காக காத்திருந்தேன். சரியான தருணத்தில் பால்கியின் அழைப்பு கிடைத்தது. என கூறிய தனுஷிடம் பாவனா நீங்கள் இந்த படத்திற்காக தூங்காமல் வேலை செய்தீர்களாமே என்றவுடன் அவரை முந்திகொண்டு அக்‌ஷரா ஆமா என தலையாட்டினார். 

அதற்கு தனுஷ், அப்பிடியெல்லாம் இல்லீங்க முடிஞ்சவரைக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போகணும். நாம போவோம் அவங்களே எல்லா வேலையும் முடிச்சு ரெடியா வெச்சுருப்பாங்க. கிட்டத்தட்ட நான் பிசி மாதிரி அப்டியே டேடா முழுக்க ஏத்தி குடுத்தாங்க நான் அப்பிடியே வெளிப்படுத்தினேன் அவ்ளோதான் என்றவுடன் பாவனா தன்னடக்கமா?  என கேட்டு கலகலப்பூட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய அக்‌ஷரா, ’வணக்கம்’ என சொல்ல மாணவர்கள் கரகோஷங்களை எழுப்பினர். ரொம்ப சந்தோஷமா இருக்கு , நான் நினைக்கவே இல்லை ‘ஷமிதாப்’ மூலமா எனக்கு முதல் அறிமுகம் கிடைக்கும்னு. நல்ல கேரக்டர் எனக்கு. அமிதாப்புடன் நடித்ததில் எனக்கு பெருமையாக இருக்கிறது. எனவும் கூறி பல கேள்விகளுக்கு சிரிப்பையே பதிலாக கூறினார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close