Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நீங்க ஒரிஜினலா என்ன ஐடியா வெச்சிருந்திங்க’ அஜித் கேட்டார் நான் மலைத்து போனேன் - சதீஷ் ..

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள படம் ’என்னை அறிந்தால்’. படத்தில் முதன் முதலில் வெளியாகி ஹிட்டடித்த பாடல் அதாரு அதாரு பாடல்தான். இந்த பாட்டிற்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குநர் சதீஷ் .அஜீத் சாரின் ரசிகர்களுடன் நள்ளிரவு முதல் காட்சிக்கு சென்று குத்தாட்டம் போடப் போவதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

என பட ரிலீஸுக்காக காத்திருக்கும் சதீஷ் ‘என்னை அறிந்தால்’ அனுபவம் குறித்து பேசுகையில், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்ததன் மூலம் தான் கௌதம் சாரை தெரியும், பின் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடனம் அமைத்து கொடுத்தேன். அவருக்கும் எனக்கும் ரசனை பல இடங்களில் ஒத்து போய் இருக்கிறது. இதுவே எனக்கு ’என்னை அறிந்தால்’ படத்தில் வாய்ப்பு கிடைத்த ரகசியம். இவ்வளவு பெரிய படம் அப்படின்னு ஒரு பயம் உள்ளுர இருந்தது. உன்னால பண்ண முடியும்னு கௌதம் சார் ஊக்கம் அளித்தார், என்ற சதீஷ் அஜித் குறித்து பேசும்போது, ஆதாரு... ஆதாரு...’ பாட்டு எல்லோரும் நினைப்பது போல ஒரு ஃப்ரெண்ட்ஷிப் பாட்டா மட்டும் இருக்காது. நான் அறிந்தவரை ‘வேற லெவல்’ நடனமாய் இருக்கும். நான் எனக்கு வரும் நடன அசைவுகள் என்றும், நடிகருக்கு ஏற்றார்போல் நடன அசைவுகள் என இரண்டு வகையாக ப்ளான் ஏ , ப்ளான் பி என்று பிரித்து வைத்திருப்பேன்.

வழக்கம்போல அஜித் சாரிடம் சென்று நான் பாட்டின் அசைவுகளை எடுத்து கூறிக் கொண்டே இருந்தேன். அப்போது அவர் இடையில் நிறுத்தி இதுக்கு நீங்க ஒரிஜினலா என்ன ஐடியா வெச்சிருந்திங்க அத சொல்லுங்க என்றார். நான் மலைத்து போனேன். நான் நினைத்ததை திரையில் கொண்டு வந்து நிறுத்தினார். ‘மழை வரபோகுதே’ பாடலை பார்க்கும் பொழுது நான் நடனம் அமைத்த பாடலா என்று எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது. அஜித் சார், கௌதம் சார் என ‘கிங்ஸ் ஆஃப் ரோமான்ஸ்’ இருவரும் இணைந்தால் இப்படிதானே இருக்கும் என தனது ‘என்னை அறிந்தால்’ படத்தில் வேலை செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close