Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்!

பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னை தேனாம்பேட்டை மருத்துவமனையில் இன்றுகாலமானார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

90 வயதான வி.எஸ்.ராகவன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். காஞ்சி மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவர் வி.எஸ்.ராகவன்.

 

1954ல் 'வைரமாலை' என்ற படம் மூலம் அறிமுகமானவர். எம்.ஜி.ஆர்., சிவாகி,ரஜினி,கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்.  மிமிக்ரி நிகழ்ச்சிகள் என்றாலே கலைஞர்கள் இவரது குரலை தவறாது பயன்படுத்துவது வழக்கம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close