Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்யாவுக்கு ஜோடி தமன்னா ,சந்தானத்துக்கு ஜோடி பானு !

ஆர்யா,தமன்னா, சந்தானம் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’.

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வழக்கம்போல் ஹீரோவின் நண்பனாக இப்படத்திலும் சந்தானமே நடிக்கிறார். இதில் ஆர்யாதான் வாசு. சந்தானம்தான் சரவணன். படத்தில் ஆர்யாவை போல் சந்தானத்துக்கும் ஜோடியாக ‘தாமிரபரணி’ பானு நடிக்கிறார்.

அதுவும் பானுவின் வேடம் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாம். தற்போது ஆர்யா, தமன்னா சம்பந்தப்பட்ட மான்டேஜ் பாடல் ஒன்றை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அது முடிந்ததும் விரைவில் சந்தானம், பானு இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். இதே பாணியில் ‘யா யா’ படத்தில் ‘காதல்’ சந்தியா சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. 

ராஜேஷ் படம் என்றாலே சந்தானத்திற்கான காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பதும் இப்படத்தில் கொஞ்சம் அதிகமாக தலைப்பிலேயே அவரது கேரக்டர் இடம் பெற்றுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close