Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏப்ரல் 2ல் ’கொம்பன்’ ரிலீஸ்!

’குட்டி புலி’ இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் , ராஜ் கிரண் நடித்திருக்கும் படம் ‘கொம்பன்’. கிராமத்து பின்னனியில் குடும்பம் மற்றும் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் இப்படம் பொங்கல் சிறப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ‘ஐ’ , ‘ஆம்பள’, ‘டார்லிங்’ படங்கள் முந்திக் கொண்டதால் இப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இருந்து வந்தது. 

தற்போது படம் ஏப்ரல் 2ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதே ஏப்ரலை மையமாக வைத்து கமலின் ‘உத்தம வில்லன்’ மற்றும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

இப்படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறும் போது , படம் நன்றாக வந்திருக்கிறது. மேலும் கார்த்தியும், ராஜ்கிரண் இருவரும் தங்களது அபார நடிப்பை வெளிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

படம் குறித்து கார்த்தி பேசியதாவது, ''கிராமம், குடும்பம், உறவுகளுக்குள் நடக்கும் விஷயங்கள், பங்காளிப் பகைனு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விஷயங்கள் இருக்கும். நிறைய அன்போடு கொஞ்சம் அந்நியமா இருக்கிற மாமனார் - மருமகன் உறவுதான் மெயின் கதை. எனவும் கூறியுள்ளார்.  ’பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் முழு நீள கிராமத்து படம் ‘கொம்பன்’. ‘மெட்ராஸ்’ அனைவரிடம் பாராட்டுகளை பெற்று ஹிட்டடித்தை அடுத்து கார்த்தியின் இப்படமும் சற்று எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close