Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாரா பீர் வாங்கும் காட்சி - இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

சமீபத்தில் நயன்தாரா ஒயின்ஷாப்பில் சென்று பீர் வாங்கு வீடியோ ஒன்று சமூக வலைகள், வாட்ஸப், என பரவி வைரலானது. இது உண்மை என பலரும் பெரிதுபடுத்தி இணையத்தில் செய்திகள் வெளியாக இப்போது ‘ நானும் ரவுடிதான்’ படத்தின் ஒரு காட்சி என தற்போது உறுதியாகியுள்ளது.

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவா இயக்கும் படம் ‘நானும் ரவுடிதான்’. படத்தில் வரும் நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை யாரோ மொபைலில் படம் பிடிக்க தற்போது இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்து போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிந்து வருகிறது.

எனவே பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்க கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லா விட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close