Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரு, ஜெய் , வருண்மணியன் கூட்டணியில் புதிய படம்!

'வலியவன்', ’புகழ்’ படத்தில் பிஸியாக நடித்துவரும் ஜெய் மார்ச் மாதம் தனது அடுத்த படமாக இயக்குநர் திருவுடன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். 
 
’தீராத விளையாட்டு பிள்ளை’, ’சமர்’, ’நான் சிகப்பு மனிதன்’ என விஷாலை வைத்தே மூன்று படங்களை இயக்கியவர் தற்போது முதல் முறையாக ஜெய்யுடன் இணைந்துள்ளார். 
 
இன்னும் பெயரிடப்படாத இப்படம் மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. த்ரிஷாவின் வருங்கால கணவர், ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ‘காவியத்தலைவன்’ படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. படத்தை இணைந்து தயாரிக்க உள்ளனர் ஃபிலிம் டிபார்ட்மெண்ட். 
 
 
படத்தின் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு கேமரா நாதன். படம் குறித்து பேசிய இயக்குநர் திரு இந்த படம் தனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான படம். எனவும் கூறியுள்ளார். படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. 
 
ஏற்கனவே ஜெய்யின் ’வலியவன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகிவிட்டது. அதே போல் ‘ புகழ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிவிட்டது, இந்நிலையில் திரு - ஜெய் கூட்டணியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகீறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close