Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

46 நாட்களில் படப்பிடிப்புகள் நிறைவு - ரிலீஸுக்கு தயாராகும் ஹவ் ஓல்ட் ஆர் யூ ரீமேக்!

ஜோதிகா மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் படம் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. படத்தை இயக்கிவருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ். திருமணத்திற்கு பின்பு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்காத ஜோதிகா இப்படத்தின் கதை பிடித்து போகவே ஜோதிகா க்ரீன் சிக்னல் காட்டி விட்டார். 

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வெளியாகி ஹிட்டடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக்கான இதில் ஜோதிகா ஹீரோயினாகவும் அவருக்கு ஜோடியாக ரகுமானும் நடிக்கிறார். கணவனால் உதாசீனப்படுத்தப்படும் ஒரு பெண் தன் வாழ்வில் எப்படி தனி ஆளாக உயர்கிறாள் என்பதே கதை.

தற்போது படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்து , ரீரெக்கார்டிங், டப்பிங் வேலைகள் துவங்கியுள்ளன. படத்தை சூர்யாவே தயாரித்து வருகிறார். வெறும் 46 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழுவினர் கடைசி கட்ட படப்பிடிப்பாக சோழிங்கநல்லூரில் நிறைவு செய்துள்ளனர். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் தற்போது வரை ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற பெயரில் தான் குறிப்பிடப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close