Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இது நம்ம ஆளு’ படத்தில் ஆர்யா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் முதல்முறையாக இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

படத்தின் இன்னொரு கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஒரு காட்சியில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் வர இருக்கிறாராம். இதே போல் ஏற்கனவே ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என இரு படங்களில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யாவின் வருகைக்காகதான் படப்பிடிப்புகள் சில  நாட்கள் தாமதம் ஆனதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close