Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்!

'கயல்’ படத்திற்கு பிறகு பிரபு சாலமன் தனது அடுத்த படமாக தனுஷுடன் இணைந்துள்ளார். முதல் முறையாக தனுஷ் - பிரபுசாலமன் கூட்டணி சேர்ந்துள்ளனர். 

தனுஷுக்கு அடுத்த அடுத்த படமாக ‘ஷமிதாப்’ மற்றும் ‘அனேகன் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அதேபோல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , காஜல் அகர்வால் நடிக்கும் படமான ‘மாரி’ படத்தின் படப்பிடிப்புகளும் முடியும் தருவாயை நெருங்கியுள்ளன. 

இந்நிலையில் அடுத்த படமாக பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இசை பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான். ஹீரோயின் , மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முடிவாகவில்லை.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close