Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிப்ரவரியில் தனுஷின் மூன்று படங்கள்!

நடிப்பு, தயாரிப்பும் இடையில் பாடலாசிரியர், மற்றும் பாடகர் என படு பிஸியாக இருக்கும் தனுஷ் தற்போது ‘அனேகன்’, மற்றும் ‘ஷமிதாப்’ படங்களின் ப்ரமோஷன்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். இந்நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் மட்டும் தனுஷின் மூன்று படங்கள் வெளியாக உள்ளன. 

பிப்ரவரி 6ம் தேதி பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ், அக்‌ஷரா இணைந்து நடித்த ‘ ஷமிதாப்’. பிப்ரவரி 13ம் தேதி காதலர் தின சிறப்பாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘அனேகன்’ வெளியாக உள்ளது.

தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படமும் பிப்ரவரி 27ம் தேதி வெளியாக உள்ளது. என்ன ஒரு சிறப்பான மாதம் , எல்லா புராஜெக்டுகளும் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ். 

தமிழில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அனேகன்’ வெளியாகிறது. இந்தி ரிலீஸுடன் சேர்த்து மொத்தமாக 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close