Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓகே கண்மணி கண்டிப்பாக அனைவரையும் கவரும் - பி.சி.ஸ்ரீராம்!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘ஓகே கண்மணி’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். பல வருடங்களுக்கு பிறகு இந்த மூவர் கூட்டணி இணைந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது படம் குறித்து பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் , ’ஓகே கண்மணி’ படம் புதுமையான காதல் கதை கொண்டது. கதையின் கதாபாத்திரங்கள் உங்களை கண்டிப்பாக கவரும். ஏப்ரல் வரை காத்திருங்கள். மணிரத்னம், அவரால் முடிந்தவரை படத்தில் தனது சிறப்பை கொடுத்துள்ளார். என ட்வீட் செய்துள்ளார்.

 இதன் மூலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் , இசை , டிரெய்லர் என மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close