Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பெங்களூர் டேஸ்’ ரீமேக்கில் நாங்கள் இல்லை - சித்தார்த், சமந்தா!

மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘பெங்களூர் டேஸ்’. சகோதர, சகோதரிகளின் பிள்ளைகளுக்கிடையே உள்ள அண்ணன், தங்கை, அத்தான் போன்ற உறவுகள் அதைச் சார்ந்து நடக்கும் கதை என மலையாளத்தில் மெகா ஹிட்டான படம். 

இந்த படம் தமிழில் ஆர்யா, சித்தார்த், சமந்தா நடிப்பில் ரீமேக்காக உள்ளது என இப்போது வரை தகவல்கள் இணையத்தில் சுத்தி வருகின்றன. அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார் சித்தார்த். 

’பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக்கில் நான் நடிக்கப்போவதில்லை. 2015ல் எனது அடுத்த படம் குறித்த தகவலை விரைவில் அறிவிப்பேன். இப்பொதைக்கு ’எனக்குள் ஒருவன்’ படத்திற்காக காத்திருக்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். 

இதே போல் சமந்தாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு , நான் ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்கில் நடிக்கவில்லை என ட்வீட் செய்துள்ளார். இப்பொதைக்கு தமிழில் மூன்று படங்கள், தெலுங்கில் மூன்று படங்கள் என பிஸியாக இருக்கிறேன். அனைத்திலும் எனது கதாப்பாத்திரம் சற்று கணமாக இருக்கிறது. இவைகளை முதலில் முடித்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழில் உருவாக உள்ள இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்க பொம்மரிலு பாஸ்கர் இயக்க உள்ளார். இப்போது இவர்கள் இருவரும் படத்தில் இல்லாத நிலையில் ஆர்யாவாவது நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close