Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனது வலிமைக்கு காரணம் பெற்றோரின் பிரிவே - மனம் திறந்த அக்‌ஷரா!

எனது பெற்றோரின் பிரிவு என்னை வலிமையானவளாக மாற்றியது என்று நடிகர் கமல்ஹாசனின் மகள் அக் ஷரா கூறியுள்ளார்.


மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை அக் ஷரா, என் அம்மாவும் (சரிகா), அப்பாவும் (கமல்ஹாசன்) பன்முக திறமை வாய்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். அதேசமயம், அவர்கள் இருவரும் தங்களது திறமைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். திறமைக்காக முழு இதயத்தையும் அர்ப்பணித்தவர்கள். எனக்கு அவர்கள் இருவரும் சரிசம முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஏதாவது ஆலோசனைகள் தேவைப்பட்டால், இரண்டு பேரிடமும் கேட்பேன்.



எனது பெற்றோரின் பிரிவு என்னை வலிமையானவளாக மாற்றியது. இது அவர்களுடைய வாழ்க்கை. அதில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை பின்னர் தான் நான் உணர்ந்தேன். அவர்களது மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம். அதனால்தான் அவர்களது விருப்பப்படி விட்டு விட்டேன். நான் அவர்கள் இருவரது வாழ்க்கையில் இருந்தும் பலவற்றை கற்றுக் கொண்டேன்.

நானும், எனது சகோதரி ஸ்ருதிஹாசனும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருப்போம். சிறுவயதில் நான் அவருக்கு தம்பியை போல இருந்து அவருக்கு பாதுகாப்பாக இருந்தேன். அவரும் ஒரு அக்காவை போல் எனக்கு பாதுகாப்பு அளித்தார். என் அப்பா, சகோதரியுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். அவர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close