Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் நான் நடிக்கிறேன் - ஹீரோ முரளிராம் நெகிழ்ச்சி!

ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில்நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் படம் தொப்பி’ . இயக்குனர் யுரேகா இயக்கத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகின. டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் விஜய் சேதுபதிவிமல்,பழம்பெரும் இயக்குநர்கள் GN. ரங்கராஜன், SP. முத்துராமன்பாக்கியராஜ் மற்றும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்று பேசினர்.

படம் குறித்து கதாநாயகன் முரளி ராம் கூறியபோது “ இக்கதையில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இந்த கதையை என்னிடம் இயக்குனர் யுரேகா கூறும்பொழுது இவ்வளவு அழுத்தமான கதாப்பாத்திரத்தை  என்னால் நடிக்க முடியுமா என்று சந்தேகத்தில் இருந்தேன்.

இயக்குநர் யுரேகா நான் பார்த்து கொள்கிறேன்நீதான் இப்படத்தின் கதாநாயகன்என்றுஒரு குருபோல் என்னை வழிநடத்தி எனக்கு ஊக்கம் அளித்தார். இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குனர் யுரேகா மற்றும் தயாரிப்பாளர்கள் பரமராஜ்பாலு ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் அறிமுக கதாநாயகன் முரளி ராம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close