Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டார்லிங் படக்குழுவுக்கு விஜய் வாழ்த்து!

பொங்கலுக்கு வெளியான 'டார்லிங்' அதே நாளில் வெளியான ‘ஐ’ மற்றும் ‘ஆம்பள’ படங்களை காட்டிலும் வசூலிலும் விமர்சன அளவிலும் ஹிட்டானது.

காமெடி கலந்த பேய் படமான இதனை ரசிகர்கள் விரும்பி ரசிக்கின்றனர். படம் வெற்றியடைந்ததால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் ‘டார்லிங்’ படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

 

விஜய், சிறப்பாக படமாக்கியிருக்கிறீர்கள் என்று இயக்குநரையும் அத்துடன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான முதல் படத்திலேயே அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close