Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை அறிந்தால் சிறப்பு காட்சிகள் ரத்து!

கௌதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், விவேக் நடிப்பில் உருவாகியுள்ள படம், ’என்னை அறிந்தால்’  படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பிரம்மாண்ட படங்கள் மற்றும் பெரிய ஹீரோக்கள் படமென்றாலே எப்போதும் அதற்கு சிறப்பு காட்சிகள் உண்டு. 

அதிகாலை 4.30 மணியளவில் அல்லது 5.30 மணியளவில் அக்காட்சி போடுவது வழக்கம். இன்னும் சில படங்களுக்கு நள்ளிரவு காட்சிகளும் உண்டு. அப்படி ’என்னை அறிந்தால்’ படத்திற்கு பிரத்யேகமாக நள்ளிரவு 12மணி காட்சி போடுவதாக இருந்தது. ஆனால் படம் வெளியாகும் நாளில் குண்டு வைக்கப்படும் என மிரட்டல் வந்ததை முன்னிட்டு படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

சிறப்பு காட்சிக்கு போலீஸ் தரப்பிலும் மறுப்பு வந்துள்ளதால் இப்போது ரத்தாகியுள்ளது. படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணியிலிருந்துதான் துவங்கும் எனவும் வழக்கமாக சென்னையின் முதல் காட்சி காசி தியேட்டரில்தான் ஆரம்பிக்கும். இந்தமுறை அங்குகூட ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு 5 மணி காட்சிதான் முதல் காட்சியாக உள்ளது என ரசிகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்போது புதிய தகவலாக 4.30 மணி ஷோவுக்கான டிக்கெட்டுகளிலும் 7மணி என குறித்து கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close