Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் - கௌதம் மேனன் கூட்டணியில் ’யோஹன்’ அத்தியாயம் ஒன்று?

விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ புராஜெக்ட் முன்பே பேசப்பட்டது. இடையில் சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த படம் துவங்கினால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். 

சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் மேனனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் , படம் பெரும்பாலும் லண்டனில் நடப்பது போன்று கதை எழுதியதால் படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம்பெருவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என விஜய் நினைத்ததாலேயே இப்படத்திலிருந்து விலகினார். ஆனால் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் கைவிடப்படவில்லை. கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து விரைவில் படமாக்க இருக்கிறேன் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார்.எனினும் படத்தில் விஜய் ஹீரோவா அல்லது வேறு ஹீரோவா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close