Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதை பற்றி நினைப்பதே வேடிக்கையானது - நயன்தாரா அதிரடி பதில்!

சமீபத்தில் ’நானும் ரவுடிதான்’ படத்தின் ஒரு காட்சியில் நயன்தாரா மதுபான கடையில் சென்று பீர் பாட்டில் வாங்குவது போன்று காட்சி உள்ளது. இந்த காட்சி மொபைல் வீடியோவாக சமூக வலைகளில் பகிரப்பட்டது. மேலும் பல இணையதளங்கள் பீர் வாங்கும் நயன் என செய்திகளையும் வெளியிட்டனர். அடுத்து இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கும்படி இந்து மக்கள் கட்சி கண்டனம் , மற்றும் உருவபொம்மை எரிப்பு என தங்களது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். 

இதற்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார். பொதுவாகவே என்னை பற்றிய செய்திகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. ஆனால் இந்த செய்தியை பற்றி நான் நினைப்பதே வேஸ்ட் என நினைக்கிறேன். மேலும் இந்த சின்ன விஷயத்தை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எதையும் நிருபிக்க தேவையில்லை என நினைக்கிறேன். 

அவ்வளவு பொதுமக்கள் கூடியிருக்கும் வேளையில் நான் ஒயின் ஷாப்பில் பீர் வாங்கினால் அதை மக்கள் பார்த்து கொண்டு சும்மா இருப்பார்களா. அது ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சி. மேலும் படத்தின் பல காட்சிகள் எதார்த்தமாக இருக்க வேண்டி ஒரிஜினல் இடங்களையே தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். அதில் ஒரு காட்சி தான் அந்த பீர் வாங்கும் காட்சி. 

இதை கூட புரிந்து கொள்ளாது இப்போது செய்தியாகவும் தேவையில்லாத சமூக பிரச்னையாகவும் சித்தரிப்பது தேவையில்லாத விஷயம். ஒரு செய்தி உண்மையா பொய்யா என விசாரித்து செய்தியாக்குங்கள் என நயன்தாரா கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close