Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பிரம்மாண்ட படம்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் நடிக்கிறார். இப்படம் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சங்கமான முறையில் இப்படம் உருவாகிறது.

’மூன்றாம் பறை’, ’கிழக்குவாசல்’, ’இதயம்’, ’பார்த்திபன் கனவு’, ’எம் மகன்’ என அனைவராலும் பாராட்டப்பட்டு மத்திய மாநில விருதுகளை அள்ளிய படங்களை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தற்போது இயக்குநர் பிரபு சாலமன் இயக்க, தனுஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கின்றனர்.

செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன்.

படத்திற்கு இசை டி.இமான். ஒளிப்பதிவு - வி. மகேந்திரன், படத்தொகுப்பு - தாஸ், நிர்வாக தயாரிப்பு  ராகுல். விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close