Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டு படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமான எஸ்.ஏ.சி!

அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை முழுநேர நாயகனாக மாற்றி உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களிடம் கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் . அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற ’பாக்பான்’ எனும் படத்தின் கதையை தழுவியது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.
இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்