Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண் கலங்கிய அருண்விஜய்!

யாரும் எதிர்பாராத பிரமிப்பு என்னை அறிந்தால். அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களையும் ரசிக்க வைத்து வரவேற்ப்பு பெற்றிருக்கிறது படம். அஜித் மட்டுமில்லாமல் அருண் விஜய் தன்னுடைய வேடத்தில் அசத்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

படம் முடிந்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து பேசும் போது கண் கலங்கிவிட்டார் அருண்விஜய். வார்த்தைகள் இல்லாமல் அருண் கண்கலங்கியது, படத்தில் அவரின் தூய்மையான நடிப்பிற்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ அவருக்கு மட்டுமில்லாமல் எனக்கும் திரையில் இடம் ஒதுக்கி என்னை நடிக்க வைத்த அஜித்துக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் இல்லாவிட்டால்,  ஏதுமே நடந்திருக்காது” என்று அஜித்துக்கு ஸ்பெஷல் நன்றிகளை தெரிவித்திருக்கிறார் அருண் விஜய்.

சுந்தர்.சி. இயக்கத்தில் 'முறைமாப்பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமாகி 'பாண்டவர் பூமி', 'மலை மலை', 'தடையறத் தாக்க' போன்றப் படங்களின் மூலம் வெற்றிப் பெற்றாலும்,  முதல் முறையாக வில்லன் கதாப்பாத்திரத்தில் என்னை அறிந்தால் படத்தில் ‘விக்டர்’ என்ற வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் அருண்விஜய். சினிமாவில் அடுத்த இன்னிஸ்ஸை தொடங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்