Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிகாந்தை உச்ச நீதிமன்றத்திற்கு இழுக்கும் தயாரிப்பாளர்!

பட தலைப்பு விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு  செல்ல பட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். 

தமிழில் பல்வேறு படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் ஆதித்ய மேனன். இவர் நடிக்கும் இந்தி படம் ‘மே ஹுன் ரஜினிகாந்த்‘. ஃபைசல் சைப் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் தலைப்பை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதில், ‘எனது இமேஜையும், மக்களிடம் எனக்குள்ள மரியாதையையும் கெடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கிளிப்பிங்க்ஸ், தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை பார்த்தபோது இந்த விவரம் தெரியவந்தது. எனவே இப்படத்துக்கு என் பெயரை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்'  எனக் கூறியிருந்தார். 

அதை ஏற்று படத்துக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் படத்தின் தலைப்பை மாற்றுமாறு  ரஜினிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் ஃபைசல் சைப் கூறுகையில், ' இப்படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்பவே படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது. கதையும் ஹீரோவை சுற்றியே நகர்கிறது. ஒரு இயக்குனர் கதாசிரியராக ரஜினியின் மனதை மேலும் புண்படுத்த நான் நினைக்கவில்லை.

படத்தின் தலைப்பை மாற்றவே நான் நினைக்கிறேன். ஆனாலும் பட தயாரிப்பாளர் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறார். அதை என்னால் தடுக்க முடியாத நிலை உள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த மோதலை தொடர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை" என்றார். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close