Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்புவுக்கு இணையவாசிகள் கண்டனம் - சிம்பு பதில்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா , அருண் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் ’என்னை அறிந்தால்’ படம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு பெரும்பாலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெங்கட் பிரபு, சிம்பு, சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று அஜித் ரசிகரான சிம்பு படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ’ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல தமிழ் படம். சில மெண்டல் மக்களை தவிர்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் படத்தை விரும்புவர்’ என ட்வீட் செய்ய பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதில் விஜய் ரசிகர்கள் சிலரும் கொஞ்சம் சூடாகியுள்ளனர். சிலர் எனக்கு படம் பிடிக்கவில்லை அதற்காக நான் மெண்டலா என கேட்டு வருகின்றனர். கணப்பொழுதில் இதை குறிப்பிட்ட டேகில் டிரெண்டும் செய்தனர். 

தற்போது இதற்கு சிம்பு தனது பதிலை பதிவு செய்துள்ளார். சிலர் தேவையில்லாமல் ரசிகர்களுக்குள் பிரச்னை உண்டாக்குகின்றனர். ரசிகர்கள் புரிந்துகொண்டு செயல்படுங்கள். சிலரது பொறியில் தேவையில்லாமல் சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்