Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு படத்திற்கு போராட்டங்கள் நடத்துவது ஏற்புடையது அல்ல - ப்ரியா ஆனந்த், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கண்டனம்!

நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு எதிர்ப்புகள் இந்து மக்கள் கட்சி எதிர்ப்புகள் கிளப்பின. தற்போது அதற்கு ப்ரியா ஆனந்த், விக்னேஷ் சிவன், மற்றும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ப்ரியா ஆனந்த் கூறும்போது:

ரிலீசுக்கு முன்பே ஒரு படத்திற்கு போராட்டங்கள் நடத்துவது ஏற்புடையது அல்ல.நாங்கள் நடிகைகள். சினிமாவில் பணத்துக்காக நடிக்கிறோம். ஒரு பெண் புகைப்பிடிப்பது போல் படத்தில் காட்சி இருக்கும். இதற்காக நிஜத்தில் அவர் புகைப்பிடிக்கிறார் என்று அர்த்தம் அல்ல.

கதைக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் அது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கிறது. டைரக்டர் கேட்கும் பட்சத்தில் நாங்கள் நடித்து கொடுக்கிறோம். படம் வெளியாகும் போது அந்த காட்சியின் முக்கியத்துவம் தெரிய வரும்.

இதே போல் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறும்போது, 

‘‘நானும் ரவுடிதான்’’ பட டைரக்டர் விக்னேஷ்சிவன் கூறும்போது, கதைக்கு தேவை என்பதால் அப்படியொரு காட்சியை எடுத்தேன்.

படம் ரிலீசாகும்போது அது தெரிய வரும். இதற்காக நயன்தாராவை குறி வைத்து தாக்குவது ஏன் என்று புரியவில்லை. டைரக்டர் சொல்கிறபடி நடிகர்கள் நடிக்கின்றனர். நயன்தாராவும் அதைதான் செய்தார்’’ என்று கூறியுள்ளார்.

நயன்தாராவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டில் வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் கவனம் செலுத்துங்கள் இது போன்ற போராட்டங்கள் தேவையற்றது என கூறியுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close