Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்கள்!

நடிகர் அஜித் குமாருக்கு சிலை வைத்து அவரது ரசிகர்கள் அமர்க்களப்படுத்தியுள்ளனர். அஜித்தின் "என்னை அறிந்தால்" படம் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று திரையிடப்பட்டது.

 

படம் பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டனர். தியேட்டர்களில் ரசிகர்கள் அஜித் கட் அவுட்களும், கொடி தோரணங்களும் கட்டி இருந்ததோடு, கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

இந்நிலையில் சேலத்தில் அஜித் ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாடினர். அஜித்துக்கு சிலை அமைத்து அதை ஒரு வேனில் எடுத்து வந்து அமர்க்களப்படுத்தினர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close