Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஐ’ படத்தை எதிர்த்து வழக்கு!

பொங்கல் சிறப்பாக வெளியான ‘ஐ’ படத்தில்திருநங்கைகளை அவமதித்ததாக போராட்டங்கள் எழுந்தன. இதற்கு ஒஜாஸ் ரஜனி பதிலும் அளித்திருந்தார். எனினும் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றை திரும்பப் பெறக்கோரி திருநங்கை பாரதி கண்ணம்மா மனு தாக்கல் செய்துள்லார். 

மனுவில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ’ஐ’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்பட்டது. இதில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் விக்ரம், நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோர் திருநங்கைகளை அவமதித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது திருநங்கைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்புவதாக உள்ளது.

எனவே இந்த படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை திரும்பப்பெற திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும். அது வரையில் திருநங்கைகள் தொடர்பான காட்சிகளை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது. மனுதாரர் திரைப்பட தணிக்கை வாரியத்தை அணுகி நிவாரணம் பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close