Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’!

கவுண்டமணி திரும்ப நடிக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் படம் ‘49ஓ’ எப்போது ரிலீஸ் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ‘வாய்மை’ என்ற மற்றொரு படத்திலும் நடித்து அந்த படமும் ரிலீசாக உள்ளது. 

தற்போது ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தை கணபதி பால இயக்க உள்ளார். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். கவுண்டமணியின் தனித்தனமையை யாராலும் வெல்ல முடியாது. 

அவரால் மட்டுமே இந்த படத்திலும் நடிக்க முடியும் எனவும் , மேலும் படம் மார்ச் மாதத்தில் துவங்கப்பட உள்ளது எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ’49ஓ’ படத்தின் ரிலீஸுக்கான பணிகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close