Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெய்க்கு அண்ணனாக பிரபுதேவா!

வருண்மணியன் தயாரிப்பில், இயக்குநர் திரு படத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ஜெய் மற்றும் த்ரிஷா நடிப்பில் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவிருக்கிறது.

கும்பகோணம் பெண்ணாக நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. ஜெய் மற்றும் த்ரிஷா இருவருக்கும் சமமான கதாப்பாத்திரம் இருப்பதாகவும் இவrகள் இருவரின் பாத்திரமும் கதையை பலப்படுத்தும் என்கிறது படக்குழு. தமன் இசையமைக்க, ரிச்சர்ட் எம். நாதன் கேமராவில் ரூபன் எடிட்டிங் செய்ய விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. சென்னை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் படபிடிப்பு நடைபெற உள்ளது.

தற்போது இப்படத்தின் புதிய செய்தியாக பிரபு தேவா ஜெய்க்கு அண்ணனாக நடிக்க இருக்கிறார். திரு படத்தின் கதையை பிரபு தேவாவிடம் கூற அவருக்கு பிடித்துவிட்டதாம் உடனே ஓகே எனவும் கூறிவிட்டாராம். ’உருமி’ படத்திற்கு பிறகு நீண்ட வெளிக்கு பிறகு தமிழில் பிரபுதேவா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நான்கு வருடமாக பிரகாஷ் ராஜ், மற்றும் பிரபு தேவா, பூமிகா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ படம் உருவாகி வரும் நிலையில் இப்படம் எப்போது ரிலீஸ் என்ற தகவலே இல்லாமல் இருக்க திருவின் புதிய படம் மூலம் பிரபுதேவா மீண்டும் தமிழுக்கு வந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close