Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யை தொடர்ந்து அஜித் - அனிருத் அடுத்த ஸ்டெப்?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’ .  பிப்ரவரி 5ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் ஏப்ரலில் துவங்க உள்ளது. படத்தை ‘வீரம்’ சிவா இயக்க இருக்கிறார்.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் அமைக்கப்பட உள்ள இப்படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஹன்சிகா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட நாயகிகளின் பெயர்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்திற்கு இசை அனிருத் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்யின் ‘கத்தி’ படத்தில் பாடல்கள் அமைத்தவர் , இப்போது ராம் சரணின் படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்துவிட்டார்.

இப்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திற்கு இசை அனிருத் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் படத்திலும் இசை எனில் அனிருத் தனது கேரியரில் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைக்கிறார் என்றே அர்த்தம். மேலும் அனிருத் இசையில் சென்ற வருடம் அதிகம் விற்பனை ஆன பாடல்களில் டாப் 10 இடத்தில் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close