Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏப்ரல் 2ல் ‘உத்தம வில்லன்’ ரிலீஸ் - ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், ஊர்வசி, பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெய்ராம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தம வில்லன்’. படத்திற்கு இசை ஜிப்ரான். கமல் இதில் 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா டாப் நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது.

இந்த படத்தின் இசை வெளியீட்டை மார்ச் 1-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 



ஈராஸ் நிறுவனம் தற்போது கமல்ஹாசனின் ’உத்தம வில்லன்’ வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ளது. ‘உத்தம வில்லன்’ வருகிற ஏப்ரல் 2 தேதி வெளியாகும் என ஈராஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close