Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யா - அமலாபால் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் “இது நம்ம ஆளு” விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தொடர்ந்து பாண்டிராஜ் “பசங்க” பாணியில் ஒரு படம் எடுத்து வருகிறார். சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடிக்கும் இப்படத்திற்கு “ஹைக்கூ” என்று பெயரிடப்பட்டுள்ளதை பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

சூர்யா துவங்கியுள்ள 2டி எண்டர்ட்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா, அமலாபால் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் பிந்துமாதவியுடன் சிறுவர்கள் பலர் நடித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாஸ்” படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் சூரியா. சூர்யா, அமலா பால் இணைந்து நடிக்கும் முதல் படம் “ஹைக்கூ” என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் உலகை புரிந்து, படம் எடுத்து ரசிகர்களையும், சினிமா விமர்சகர்களையும் ஈர்த்த பாண்டிராஜின் அடுத்தப் படைப்பான “ஹைக்கூ”குழந்தைகளின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்குமாம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close