Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை அறிந்தால் பாகம் 2 ?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக், நடிப்பில் வெளியாகியுள்ள ‘என்னை அறிந்தால்’  வசூல், விமர்சனம் என பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் இணைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திட்டத்தில் கௌதம் மெனன் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, கதை முழுக்க முழுக்க ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரிக்கும், அவருடைய 15 முதல் 16 வயது மகளுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.

 

இதில் போலீஸ் அதிகாரி பாகங்கள் முற்றிலுமாக இல்லாமல் ஒரு முன்னாள் அதிகாரி அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த படமாக இருக்குமாம். இப்படம் குறித்து இறுதி முடிவு என்பது தற்போது அஜித்தின் வார்த்தையில் தான் உள்ளது.

சிம்பு படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை ஐங்கரன் நிறுவனத்துக்காக இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதயடுத்து ‘என்னை அறிந்தால்’ பாகம் 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close