Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகேஷ் பாபுவுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்!

’ஆகடு’ படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு ‘ஸ்ரீமந்துடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்து வருகிறது. சென்ற வருடம் தெலுங்கின் டாப் நடிகர் லிஸ்டில் இடம்பிடித்த தெலுங்கின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம்.

இவரது பல படங்கள் தமிழில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது, மேலும் ‘நந்து’, ‘வரேண்டா மதுரைக்கு’ ,’பிஸ்னஸ் மேன்’ என பல படங்கள் தமிழில் டப்பாகி வெளியானதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்காக மதுரையில் ஷூட்டிங் நடந்து வருகிறது . ஷூட்டிங்கில் மகேஷ் பாபு இருப்பது தெரிந்து அவரை நேரில் சென்று சந்தித்து வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அவரை சந்தித்த மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் ‘ மகேஷ் பாபுவை சந்திதேன், ரொம்ப எளிமையான மற்றும் இளகுவானவர், உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி மகேஷ் சார்’ என ட்வீட் செய்துள்ளார். 

மகேஷ் பாபு நடிக்கும் ’ஸ்ரீமந்துடு’ படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க,  ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close