Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பை சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமா பெஸ்ட் - சுதன்ஷு பாண்டே!

’பில்லா-2’ படத்தின் மூலம் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர் சுதன்ஷு பாண்டே. தொடர்ந்து ‘மீகாமன்’ படத்தின் மூலம் அடுத்த லெவல் சென்ற சுதன்ஷு தற்போது ’இந்திரஜித்’ படத்தில் நடித்து வருகிறார். 

கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி, நடிப்பில் கலாபிரபு இயக்கி வரும் படம் ‘இந்திரஜித்’. இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் கௌதம் கார்த்திக். ஆக்‌ஷன் கதையாக உருவாகி வருகிறது இந்த படம்.

 

இந்நிலையில் படத்தில் தன் கேரக்டர் குறித்து சுதன்ஷு பேசியபோது, ‘இந்திரஜித்’ படத்தில் எனது கேரக்டர் மிகவும் சஸ்பென்சாக இருக்கும், படம் ’இந்தியானா ஜோன்ஸ்’ பாணியில் பக்கா ஆக்‌ஷன் மற்றும் அட்வென்சர் கதை. மேலும் எனக்கு இந்தி சினிமாவை விட தமிழ் சினிமாவை மிகவும் பிடித்துவிட்டது. 

மும்பை சினிமாவை விட தமிழ் சினிமா பெஸ்ட். இங்கிருக்கும் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல் படத்தின் கான்செப்டுகளும் அவ்வளவும் அற்புதமாக இருப்பதால்தான் பல தமிழ் படங்கள் இந்தியில் தற்போது ரீமேக் ஆகிறது. அதேபோல் இங்கிருக்கும் மக்களும் மிகவும் அன்பானவர்கள் எனக் கூறியுள்ளார். 

அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, அஜித் மிகப்பெரிய நடிகர், ஆனால் எந்த கட்டத்திலும் அந்த ஈகோ அவரிடம் இல்லை. நான் பார்த்த நடிகர்களில் அஜித் மிகவும் பணிவான மனிதர். எனக்கு ஸ்டார் என்ற தோரணை காட்டாத நடிகர்களை மிகவும் பிடிக்கும் அந்த வகையில் அஜித் மிகச் சிறந்த மனிதர். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close