Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலக்கிவரும் கோஸ்ட் கோபால் வர்மா!

பாலா இயக்கத்தில் வெளிவந்த “நான் கடவுள்” படத்தின் மூலம் வில்லனாக பயமுறுத்தியவர் ராஜேந்திரன். வில்லன் கதாபாத்திரத்திற்கே ஏற்ற உடல் வாகு, மொட்டைத் தலை என எல்லோரையும் படத்தில் மிரட்டி எடுத்திருப்பார். ‘உத்தமபுத்திரன்’, ’சிங்கம் 2’ போன்று பல படங்களில் வில்லனாகவே வலம் வந்தவர்.

பின்னர் ராஜேஷ் இயக்கத்தில் “ பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காமெடியனாக அனைவரையும் ஈர்த்தவர். பின்னர் அதே பாணியை தொடர ஆரம்பித்தார். “ராஜா ராணி” மற்றும் “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் பெயிண்டர் ரஜேந்திரனாகவும், டார்லிங் படத்தில் “ கோஸ்ட் கோபால் வர்மா” வேடத்திலும் ரசிகர்களை சிரிக்கவைத்தார்.

வில்லன் பாத்திரம் எடுத்தாலும் படுபயங்கர வில்லனாகவும், காமெடி பாத்திரம் எடுத்தாலும் படுபயங்கர காமெடியனாகவும் கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் படத்தின் புரோமொஷன் டீஸர்களில் கூட இவரை முன்னிலைப் படுத்தியே விளம்பரங்கள் வெளிவருர ஆரம்பித்து விட்டன.

“டார்லிங்” படத்தில் “ கோஸ்ட் கோபால் வர்மா , என்னத் தாண்டி கோஸ்ட் வருமா?,  ”ஐயம் வெயிட்டிங்”  என்ற டைலாக்குகளுக்காகவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது “இவனுக்கு தண்ணில கண்டம்” என்ற படத்தின் டீஸர் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதில் ராஜேந்திரன் “என்னை அறிந்தால்” பட டைலாக்கை மாற்றி, “ ஒரு தம்மாத்துண்டு ரோடு, ரோட்டுக்கு இந்தாண்ட நான் ரொம்ப நல்லவன், குட் பாய்! ரோட்டுக்கு அந்தாண்ட நான் ரொம்ப கெட்டவன் என்ற வசனம் பேசியிருக்கிறார்.

ஹீரோவைத் தவிர்த்து, காமெடியன்களை மையப்படுத்தி டீஸர் வெளிவருவது புது ட்ரெண்ட் ஆகியுள்ளது. “இவனுக்கு தண்ணில கண்டம்” படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. வெங்கட்ராஜ் தயாரிப்பில் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தின்கர், சாண்டி, சென்ராயன், ராஜெந்திரன் நடிக்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படத்தின் டீஸர் அண்ணா பல்கலை கழகத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.

டீஸரைக் காண: http://cinema.vikatan.com/articles/news/17/8814

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close