Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நம்மால் முடிந்த உதவியை செய்துவிட வேண்டும் என்று எண்ணும் பல நடிக நடிகைகள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நல்ல விஷயங்களை செய்வதில் விஜய் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

ஆதரவற்ற மூன்று குழந்தைகள் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுடை வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவர்களிடம் அவர்களின் ஆசை என்ன என அவர்களிடம் கேட்டப் போது நடிகர் விஜையை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறார்கள்.

ஆதரவற்ற இல்லத்தினைச் சேர்ந்தவர்கள் இந்த செய்தியினை விஜயின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த விஜய் உடனே அவர்களை சந்தித்துள்ளார். மூன்று சிறுவர்களுடனும் மகிழ்ச்சியுடன் பேசி, புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த நிகழ்வு அந்த சிறுவர்களை மிகவும் நிகிழவைத்துள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close