Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் சூர்யா- சமந்தா!

’அஞ்சான்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேருகிறார் சமந்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாஸ்” படம் முடியவிருக்கிறது. இதைத் தொடர்ந்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் “ஹைக்கூ” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் “24” என்கிற புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். தெலுங்கில் “மனம்” இயக்கியவர் விக்ரம் குமார். மனம் படத்தில் ஹீரோயினியாக நடித்த சமந்தா தான் இப்படத்திலும் சூர்யாவுடன் நடிக்கிறார்.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இப்படத்தினை தயாரிக்கிறது. வைரமுத்து வரிகளில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். சூர்யா - சமந்தா ஜோடி சேர்ந்த “அஞ்சான்” படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை எனினும்,  இந்த படம் கைகொடுக்குமா என்பது இனிதான் தெரியவரும்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close