Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது அபத்தம் - இயக்குநர் வசந்தபாலன் செய்த 20 அபத்தங்கள்...

’காவியத்தலைவன்’ படத்தை இயக்கிய வசந்த பாலன் ஒரு இயக்குநராக அவ்ர் செய்த அபத்தங்கள் என தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் என்ன செய்தாலும் வெற்றி யாருக்கு கிடைக்குமோ அவருக்குத்தான் கிடைக்கும் என்பதை தனது ஸ்டேட்டஸில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன் .

ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள், 

1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது
2.திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
3.படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
4.நமக்கு சுக்ரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
5.ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
6.கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
7.ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
8.இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது
9.படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் u will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எண்று நம்புவது
10.என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது


11.உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
12.முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது
13.கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது
14.ன் என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
15.படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
16.படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது
17.சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும என்று நம்புவது
18.தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
19.ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
20.சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது

இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன, ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி.

இவர் அபத்தமாக கூறும் இந்த விஷயங்களை அபத்தம் என்று உணரும் தருவாயிலேயே ஒரு இயக்குநராக வசந்தபாலன் பக்குவப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close