Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’லிங்கா’ பிரச்சனையில் தலையிடுகிறாரா விஜய்?

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா சந்தானம் நடிப்பில் வெளியான படம் ’லிங்கா’. இப்படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம் என நாளொரு தினமும் போராட்டங்கள், நடத்தி வருகின்றனர் விநியோகஸ்தர்கள். இந்நிலையில் படத்திற்கு நஷ்ட ஈடாக 10 சதவீத தொகையை கொடுக்க ரஜினி தரப்பு முன்வந்துள்ளனர். எனினும் அது போதாது எனவும், இதை முன்னிட்டு நாங்கள் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்த போகிறோம் என கூறியுள்ளனர். 

இந்நிலையில் கோலிவுட்டின் சில முக்கிய நடிகர்கள் ஏற்கனவே  நீங்கள் நஷ்டத்திற்கு பணம் கொடுத்து பழகி விட்டீர்கள், எனவே தான் உங்களின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் நெருக்கடி தருகிறார்கள். மேலும் இதே நிலை தொடர்ந்தால் மற்ற நடிகர்களும் பாதிக்கப்படுவோம். ரஜினியே கொடுத்து விட்டார் நீங்கள் தாருங்கள் என கேட்க ஆரம்பித்து விடுவார்கள். 

நஷ்டம் , லாபம் இரண்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பிரச்சனை. நடிகர்களிடம் கேட்பது முறையல்ல. அதே சமயம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் போது லாபத்தில் அதிகம் வந்த தொகையை நடிகர்களுக்கு சம்பளமாக மீண்டும் முன்வைப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த கேள்வியை முன் வைத்தவர்கள் சரத்குமார் , இன்னொருவர் விஜய் என கூறப்படுகிறது யோசிக்கையில் இதுவும் நியாயம் என்றே படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close