Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாறுபட்ட கதை களத்துடன் ஜெய் நடிக்கும் புகழ்!

ரொமாண்டிக், எமோஷனல், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ஜெய் நடிக்கும் “புகழ்”.

“பகவதி” படத்தில் விஜய்க்கு தம்பியாக சினிமா உலகில் கால் வைத்தவர் ஜெய். பின்னர் ’சென்னை 28’, “சுப்பிரமணியபுரம்”, “எங்கேயும் எப்போதும்”, “ராஜா ராணி”, போன்று பல வெற்றிப் படங்களின் மூலம் தனக்கான தனி இடத்தினை உருவாக்கியவர் ஜெய்.

”இவன் வேற மாதிரி” படத்தின் மூலம் அறிமுகமாகிய சுரபி இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். ”உதயம் NH4” படத்தின் மூலம் அறிமுகமான மணிமாறன் இயக்கும் இரண்டாவது படம் “புகழ்” மேலும் ஆர்ஜே பாலாஜி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது.

நம் வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ, அறியாமலே ஜெயிக்க வாய்ப்பில்லை என கருதப்படுபவர் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அப்படிப்பட்டவர் ஜெயிப்பதும் அதைச் சுற்றியுமான படமாக “புகழ்” இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் கூறியுள்ளார். இந்தப்படத்தில் முதல் முறையாக ஜெய் அரசியல் சார்ந்த கதைக்களத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் படப்பிடிப்பு வாலாஜா பேட்டையில் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. மேலும் ’வலியவன்’ படத்திலும் ஜெய் நடித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து திரு இயக்கத்தில் வருண் மணியன் தயாரிப்பிலும் ஜெய் நடிக்கவிருக்கிறார்.இந்த வருடம் 4க்கும் மேற்பட்ட படங்கள் ஜெய் நடிப்பில் வெளியாஉக் என எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close